ஆஸ்டின் தமிழ் பள்ளி கல்விசுற்றுலா 2015- சுகுணா கவர்னர்

ஆஸ்டின் தமிழ் பள்ளியின் கல்விசுற்றுலா இந்த ஆண்டு ஓல்டு செட்லர்ஸ் பார்க்-ல் உள்ள விர்க் பெவிலியனில் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி மிகச்சிறப்பாக நடந்தது. இதில் ஆஸ்டின் தமிழ் பள்ளியின் கீழ் இயங்கும் ரவுண்டு ராக், சீடர் பார்க், செளத் ஆஸ்டின் தமிழ் பள்ளிகளிலிருந்து சுமார் 70-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பங்கேற்றனர்.

காலை 10 மணி முதல் குழந்தைகள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். காலை 10.30 -12.00 மணி வரை மூன்று பிரிவு குழந்தைகளுக்கும் ஆசிரியர்கள் தத்தம் வகுப்புகளை எடுத்தனர். பிறகு குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மதிய உணவு ஆஸ்டின் தமிழ் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.

Ats2ATs1

 

மதிய உணவுக்கு பின் சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. கயிறு இழுத்தல், சாக்கு போட்டி, தண்ணீர் பாட்டில் நிரப்புதல், லெமன் & ஸ்பூன், பலூன் வெடித்தல் போன்ற போட்டிகள் மழலை, நிலை-1 மற்றும் நிலை-2 ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது.

 

ATs3Ats4

Ats5

 

இறுதியாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆஸ்டின் தமிழ் பள்ளியின் பொறுப்பாளர்களான திரு. மஹேந்திரன் நாகராஜன், திரு. தினகர் கருப்புச்சாமி, திரு. அன்பு கிருஷ்ணசுவாமி, திரு. சங்கர் சிதம்பரம், திரு. பாலா பெத்தண்ணன், திருமதி. சுகந்தி கோவிந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கி வெற்றி பெற்றவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தினர். பெற்றோர்களுக்கும் தன் பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ஒரு வாய்ப்பாக இந்த கல்விசுற்றுலா அமைந்திருக்கும் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.குழந்தைகளுக்கும் தன் நண்பர்களுடன் பூங்காவில் விளையாடியது மிகுந்த புத்துணர்ச்சியை அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை!!!

Ats6

 

 

மேலும் உணவு உபசரிப்பில் உதவியாக இருந்த திரு. சரவணபவன், திரு. விஜய் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த உதவியாக இருந்த திரு. அருள்நம்பி ராஜு, திருமதி. சுகுணா கவர்னர், திருமதி. ஆர்த்தி, திரு. கார்த்திகேயன், திரு. மோகன், திருமதி. பூர்ணிமா, திருமதி. மயில் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தன்னார்வம் கொண்டு இந்த கல்விசுற்றுலாவில் உதவி செய்த அனைவருக்கும் ஆஸ்டின் தமிழ் பள்ளியின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!!!.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter!!

[mc4wp_form id="8712"]
[wpforms id="9688"]